🔴 YARL PRESS • Sri Lanka Newsதமிழ் | සිංහල | English
YarlPress logo
ADVERTISEMENT SPACE
முகப்பு › செய்திகள் › விவரங்கள்
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு அறிவிப்பு!

● YARL PRESS📅 24-10-2026சனி🕒 09:49 AM
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு  அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு சென்ற நிலையில், மீண்டும் தாயகம் திரும்பும் இலங்கையர்கள், நாட்டில் ஏற்கனவே பெற்ற சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தை எவ்வித தடையுமின்றி சட்டப்பூர்வமாக வாகனங்களை இயக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், நாடு திரும்பும் போது சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான நடைமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம்
“வெளிநாடுகளில் வசித்து, அவர்கள் இலங்கை பிரஜைகளாக இருந்து, அவர்களிடம் இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்தால் அதனை பயன்படுத்தலலாம். அது காலாவதியாகாமல் இருந்தால் இலங்கைக்கு வரும்போது பயன்படுத்த முடியும்.
சில சந்தர்ப்பங்களில் இலங்கை பிரஜை வெளிநாட்டில் வசிக்கும் போது, அந்நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறும்போது இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரத்தை அங்கு ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பித்திருந்தால் அந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து சாதாரண இலங்கைச் பிரஜையை போன்று இங்கு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அமைச்சரின் கோரிக்கை
அதேபோல், வெளிநாட்டில் வாழும் ஒரு இலங்கை பிரஜையின், இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்துபோயிருந்தால், சாதாரண நடைமுறைப்படி முறைப்பாடு செய்து புதிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு இலங்கை பிரஜையாக இருந்து, உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்து, அது பின்லாந்து அல்லது குவைத் போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அந்த ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கையில் சாதாரண பிரஜையை போன்று சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுப் பணியாற்ற முடியும்.

எனவே, இதற்காக தேவையின்றி மேலதிக பணத்தை செலவழிக்க வேண்டியதில்லை. இலங்கை பிரஜைகள் தங்களது சாரதி அனுமதிப்பத்திரத்தின் மூலம் சட்டப்பூர்வமாக வாகனங்களை இயக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.